search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தேசிய நல்லாசிரியர் விருது"

    • தேசிய நல்லாசிரியர் விருது அளிக்கப்பட்டு இருப்பது பெருமை.
    • தொழிற்கல்வி குறித்து வகுப்புகள் எடுத்து வருகிறேன்.

    மதுரை:

    மதுரை ரிசர்வ் லைன் விஸ்வநாதபுரம் பகுதியை சேர்ந்தவர் முரளிதரன். இவர் மதுரை ஜெய்ஹிந்த் புரம் பகுதியில் உள்ள டி.வி.எஸ். மேல்நிலைப்பள்ளியில் கடந்த 39 ஆண்டுகளாக தொழில் கல்வி ஆசிரியராக பணியாற்றி வருகிறார்.

    இந்த நிலையில் ஆசிரியர் முரளிதரனின் கல்விப் பணியை கவுரவிக்கும் வகையில் இன்று தேசிய நல்லாசிரியர் விருது மத்திய கல்வி அமைச்சகத்தால் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விருது குறித்து மகிழ்ச்சி தெரிவித்துள்ள முரளிதரன் கூறியதாவது:-

    தேசிய நல்லாசிரியர் விருது கிடைத்திருப்பது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது. நான் ஏற்கனவே மாநில அரசின் டாக்டர் ராதாகிருஷ்ணன் விருது வாங்கியுள்ளேன். தற்போது தேசிய நல்லாசிரியர் விருது அளிக்கப்பட்டு இருப்பது பெருமை அளிப்பதாகவும் அமைந்துள்ளது.

    என்னால் இயன்றவரை இதனை பணியாக பார்க்காமல் மாணவர்களுக்கு செய்யும் கடமையாக பார்த்துதான் பணி செய்து வருகிறேன்.

    மாணவர்களுக்கு புரியும் வகையில் கொரோனா காலத்தில் கூட தொழில் கல்வி தொடர்பான வீடியோக்களை உருவாக்கி அதன் மூலம் பயிற்சி அளித்தேன். தொடர்ந்து யூடியூப் கல்வி தொலைக்காட்சி வாயிலாகவும் தொழிற்கல்வி குறித்து வகுப்புகள் எடுத்து வருகிறேன்.

    எனது குடும்பம் ஒரு ஆசிரியர் குடும்பம், எனது தந்தை ஆசிரியராக இருந் தார். தற்போது எனக்கு 39 ஆண்டுகள் ஆசிரியர் பணி செய்ததன் காரணமாக தேசிய நல்லாசிரியர் விருது வழங்கப்பட்டிருப்பது பெருமை அளிப்பதாக உள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இதற்கான விருது வருகிற (செப்டம்பர்) 5-ந்தேதி டெல்லியில் நடைபெறும் விழாவில் ரூ.50 ஆயிரம் ரொக்கப்பரிசு, வெள்ளிப்பதக்கம் மற்றும் சான்றிதழுடன் வழங்கப்பட உள்ளது.

    தேசிய நல்லாசிரியர் விருது அறிவிக்கப்பட்டுள்ள மதுரையை சேர்ந்த தொழில் கல்வி ஆசிரியர் முரளிதரனுக்கு தமிழக பள்ளிக்கல் வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யா மொழி தொலைபேசி மூலம் வாழ்த்து தெரிவித்துள்ளார். 

    • விண்ணப்பித்த ஆசிரியர்களில் தகுதியானவர்களை தேர்வு செய்து மாநில தேர்வு குழுவுக்கு வருகிற 25ம் தேதிக்குள் அனுப்பிவைக்க வேண்டும்.
    • மாவட்ட தேர்வு குழுவில் மாநில பிரதிநிதியாக ஒருவரும், மாவட்ட கலெக்டரின் பிரதிநிதியாக சிறந்த கல்வியாளர் ஒருவரும் இடம்பெற்று இருப்பார்கள்.

    சென்னை:

    2024-ம் ஆண்டுக்கான தேசிய நல்லாசிரியர் விருதுக்கு http://nationalawardstoteachers.education.gov.in என்ற இணையதளம் வாயிலாக 15ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

    ஒவ்வொரு மாவட்டத்திலும் மாவட்ட முதன்மை கல்வி அலுவலரை தலைவராக கொண்ட மாவட்ட குழு விண்ணப்பித்த ஆசிரியர்களில் தகுதியானவர்களை தேர்வு செய்து மாநில தேர்வு குழுவுக்கு வருகிற 25ம் தேதிக்குள் அனுப்பிவைக்க வேண்டும்.

    இந்த மாவட்ட தேர்வு குழுவில் மாநில பிரதிநிதியாக ஒருவரும், மாவட்ட கலெக்டரின் பிரதிநிதியாக சிறந்த கல்வியாளர் ஒருவரும் இடம்பெற்று இருப்பார்கள். தேசிய நல்லாசிரியர் விருதுக்கான தகுதியுள்ள ஆசிரியர்களை தேர்வு செய்யும்போது, மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை இயக்குனர் அளித்திருந்த வழிகாட்டி நெறிமுறைகளை பின்பற்ற வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 5-ம் தேதி ஆசிரியர் தின விழா கொண்டாடப்பட்டு வருகிறது.
    • நல்லாசிரியர் விருதுக்கு தேர்வு செய்யப்பட்ட ஆசிரியர்களுக்கு ஜனாதிபதி விருது வழங்கி கவுரவிக்க உள்ளார்.

    புதுடெல்லி:

    ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 5-ம் தேதி ஆசிரியர் தின விழா கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நாளில் சிறப்பாகப் பணிபுரிந்த ஆசிரியர்களை கவுரவப்படுத்தும் வகையில் தேசிய அளவிலும், மாநில அளவிலும் ஆசிரியர்கள் தேர்வு செய்யப்பட்டு அவர்களுக்கு மத்திய, மாநில அரசுகள் நல்லாசிரியர் விருதுகள், சான்றிதழ்களை வழங்கி வருகின்றன.

    நடப்பாண்டு முதல் தேசிய நல்லாசிரியர் விருது உயர்கல்வித்துறை மற்றும் திறன் மேம்பாட்டு அமைச்சகத்தின் ஆசிரியர்களையும் உள்ளடக்கியதாக விரிவுபடுத்தப்பட்டுள்ளது. இதன்படி நாடு முழுவதும் இருந்து 50 பள்ளி ஆசிரியர்கள், 13 உயர்கல்வி ஆசிரியர்கள், திறன் மேம்பாடு மற்றும் தொழில் முனைவோர் பயிற்சி நிலையங்களைச் சேர்ந்த 12 ஆசிரியர்கள் உள்ளிட்ட 75 பேருக்கு நல்லாசிரியர் விருதுகள் வழங்கப்பட உள்ளன.

    இந்நிலையில், தமிழ்நாட்டில் இருந்து மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி ஆசிரியர் டி.காட்வின் வேதநாயகம் ராஜ்குமாரும், தென்காசி மாவட்டம் கீழப்பாவூர் வீரகேரளம்புதூர் அரசு மேல்நிலைப் பள்ளி ஆசிரியை எஸ்.மாலதியும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

    தேசிய நல்லாசிரியர் விருதுக்கு தேர்வு செய்யப்பட்ட ஆசிரியர்களுக்கு செப்டம்பர் 5-ம் தேதி டெல்லி விஞ்ஞான் பவனில் நடைபெறும் ஆசிரியர் தின விழாவில் ஜனாதிபதி திரவுபதி முர்மு விருது வழங்கி கவுரவிக்க உள்ளார்.

    • விருது சிறப்பான முறையில் பணியாற்ற உற்சாகத்தை அளித்துள்ளது.
    • ஆசிரியர்கள் இணையதளம் மூலம் புதியனவற்றை கற்றுக்கொண்டு கற்பித்தால் மாணவர்களின் திறன் மேம்படும்.

    ஆலங்குளம்:

    தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே உள்ள நல்லூர் கிராமத்தில் வசிப்பவர் மாலதி. இவர், சுரண்டை அருகே உள்ள வி.கே.புதூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் அறிவியல் பட்டதாரி ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார்.

    கற்றல்-கற்பித்தலில் மாணவர்களுக்கு புதுமையாக கற்பித்தல், வில்லுப்பாட்டு, நடனம் மூலம் கற்பித்தல் என இவர் கடுமையான பாடங்களையும் எளிமையான வகையில் கற்றுக்கொடுத்து வருகிறார்.

    இவரின் சேவையை பாராட்டி கடந்த 2021-ம் ஆண்டு தமிழ்நாடு அரசு டாக்டர் ராதாகிருஷ்ணன் விருதை இவருக்கு வழங்கியது. தொடர்ந்து இவரின் சேவையை பாராட்டி இந்த ஆண்டு மத்திய அரசு தேசிய நல்லாசிரியர் விருதுக்கு இவரை தேர்வு செய்துள்ளது.

    இதுகுறித்து அவர் கூறுகையில், மத்திய அரசு பரிந்துரைத்த இந்த விருது எனக்கு மேலும் உத்வேகத்தை அளித்துள்ளது. சிறப்பான முறையில் பணியாற்ற உற்சாகத்தையும் அளித்துள்ளது.

    ஆசிரியர்கள் இணையதளம் மூலம் புதியனவற்றை கற்றுக்கொண்டு கற்பித்தால் மாணவர்களின் திறன் மேம்படும். அதன் மூலம் என்னைப் போன்று மற்றவர்களும் சாதிக்கலாம் என்று கூறினார்.

    தொடர்ந்து தேசிய நல்லாசிரியர் மாலதியை சக ஆசிரியர்கள், குடும்பத்தினர், உறவினர்கள் என பல்வேறு தரப்பினரும் நேரிலும், போனிலும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

    • நாடு முழுக்க தேசிய நல்லாசிரியர் விருதுக்கு 50 ஆசிரியர்கள் தேர்வு செய்யப்பட்டு உள்ளனர்.
    • தேசிய நல்லாசிரியர் விருது வென்ற இரண்டு தமிழக ஆசிரியர்களுக்கு கவர்னர் ஆர்.என். ரவி வாழ்த்து.

    2023-ம் ஆண்டுக்கான தேசிய நல்லாசிரியர் விருதுக்கு நாடு முழுவதிலும் இருந்து 50 ஆசிரியர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். தமிழ்நாட்டில் இருந்து மதுரை அலங்காநல்லூர் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி ஆசிரியர் காட்வின் வேதநாயகம் ராஜ்குமார் மற்றும் தென்காசி வீரகேரளம்புதூர் அரசு மேல்நிலைப்பள்ளி ஆசிரியை மாலதி ஆகிய இருவரும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

    தமிழ்நாட்டில் இருந்து தேசிய நல்லாசிரியர் விருதுக்குத் தேர்வாகி இருக்கும் இரண்டு ஆசிரியர்களுக்கும் பல்வேறு அரசியல்கட்சி தலைவர்கள் மற்றும் பலர் தங்களின் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

    இந்த நிலையில், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தேசிய நல்லாசிரியர் விருது வென்ற இரண்டு தமிழக ஆசிரியர்களுக்கும் தனது வாழ்த்துக்களை தெரிவித்து இருக்கிறார்.

    அதில், "மதுரை, அலங்காநல்லூர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி ஆசிரியர் காட்வின் வேதநாயகம் ராஜ்குமார் மற்றும் தென்காசி, வீரகேரளம்புதூர் அரசு மேல்நிலைப்பள்ளி ஆசிரியை மாலதி ஆகிய இருவருக்கும் எனது நெஞ்சார்ந்த நல்வாழ்த்துகள்! கல்வித்துறையில் தமிழ்நாடு செய்து வரும் சாதனைகளுக்கு ஆசிரியர்களே அடித்தளம்!," என்று குறிப்பிட்டுள்ளார். 

    • இருவர் தேசிய நல்லாசிரியர் விருதிற்கு தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது.
    • எனது மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்.

    புதுச்சேரி:

    2023-ம் ஆண்டுக்கான தேசிய நல்லாசிரியர் விருதுக்கு நாடு முழுவதிலும் இருந்து 50 ஆசிரியர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

    தமிழ்நாட்டில் இருந்து 2 ஆசிரியர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். மதுரை அலங்காநல்லூர் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி ஆசிரியர் காட்வின் வேதநாயகம் ராஜ்குமார் மற்றும் தென்காசி வீரகேரளம்புதூர் அரசு மேல்நிலைப்பள்ளி ஆசிரியை மாலதி ஆகிய இருவரும் தேர்வு செய்யப் பட்டுள்ளனர்.

    அவர்களுக்கு புதுச்சேரி கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து அவர் தனது டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:-

    சங்கம் வைத்து தமிழ் வளர்த்த தென் தமிழக மண்ணிலிருந்து இருவர் தேசிய நல்லாசிரியர் விருதிற்கு தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. அலங்காநல்லூர் மதுரை மாவட்டம், ஆசிரியர் அரசு ஆண்கள் பள்ளி காட்வின் வேதநாயகம் ராஜ்குமாருக்கும், தென்காசி மாவட்டம், கீழ்ப்பாவூர் வீரகேரளம்புதூர் அரசு பள்ளி ஆசிரியை மாலதிக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்.

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    • டெல்லி விஞ்ஞான் பவனில் வரும் செப்டம்பர் 5ம் தேதி விழா நடைபெறுகிறது.
    • விழாவில் தேர்வு செய்யப்பட்ட ஆசிரியர்களுக்கு தேசிய விருது வழங்கப்பட உள்ளது.

    தேசிய நல்லாசிரியர் விருதுக்கு தேர்வு செய்யப்பட்ட சிறந்த ஆசிரியர்களுக்கான பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

    இதில், தமிழகத்தில் மதுரை மற்றும் தென்காசி மாவட்டத்தைச் சேர்ந்த இரண்டு ஆசிரியர்கள் தேசிய விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

    தேசிய நல்லாசிரியருக்கான விருதுகள், மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி ஆசிரியர் காட்வின் வேதநாயகம் ராஜ்குமாருக்கும், தென்காசி மாவட்டம் வீரகேரளம்புதூர் அரசு மேல்நிலைப்பள்ளி ஆசிரியை எஸ்.எஸ்.மாலதிக்கும் வழங்கப்பட உள்ளது.

    இந்நிலையில், டெல்லி விஞ்ஞான் பவனில் வரும் செப்டம்பர் 5ம் தேதி நடைபெறும் விழாவில் தேர்வு செய்யப்பட்ட ஆசிரியர்களுக்கு தேசிய விருது வழங்கப்பட உள்ளது.

    • தாய்மொழியில் கற்பித்தால் திறமை வளர்ச்சி மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்று ஜனாதிபதி வலியுறுத்தினார்.
    • தேசிய விருது பெற்ற ஆசிரியர்களுடன் பிரதமர் மோடி கலந்துரையாட உள்ளார்.

    புதுடெல்லி:

    தொடக்கநிலை மற்றும் உயர்நிலைப் பள்ளிகளில் பணிபுரியும் சிறந்த ஆசிரியர்களுக்கு தேசிய விருதை மத்திய அரசு வழங்கி வருகிறது. அவ்வகையில், இந்த ஆண்டு இணைய தளம் வாயிலாக வெளிப்படைத் தன்மையுடன் நடைபெற்ற மூன்று கட்ட நடைமுறைகள் மூலம் தமிழ்நாடு, புதுச்சேரி, பஞ்சாப், அரியானா, மகாராஷ்டிரா, தெலுங்கானா, இமாச்சல பிரதேசம் உள்பட நாடு முழுவதிலுமிருந்து 46 ஆசிரியர்கள் விருதுக்கு தேர்வு செய்யப்பட்டனர்.

    இந்நிலையில், ஆசிரியர் தினத்தை முன்னிட்டு, மத்திய கல்வித்துறை அமைச்சகம் சார்பில் டெல்லியில் விருது வழங்கும் விழா நடைபெற்றது. விழாவில் குடியரசு தலைவர் திரவுபதி முர்மு கலந்துகொண்டு, தேர்வு செய்யப்பட்ட 46 ஆசிரியர்களுக்கும் தேசிய விருதுகளை வழங்கினார்.

    விழாவில் உரையாற்றிய ஜனாதிபதி முர்மு, தனது கிராமத்தில் இருந்து கல்லூரிக்கு சென்ற முதல் பெண் என்ற பெருமையை பெற்றதற்கு தனது பள்ளி ஆசிரியர்களின் பங்களிப்பை நினைவு கூர்ந்தார். மேலும், தாய்மொழியில் கற்பித்தால் அறிவியல், இலக்கியம் மற்றும் சமூக அறிவியலில் திறமை வளர்ச்சி மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்றும் வலியுறுத்தினார்.

    விழாவில் மத்திய கல்வித்துறை மந்திரி தர்மேந்திர பிரதான் மற்றும் உயர் அதிகாரிகள் கலந்துகொண்டனர். இதனை தொடர்ந்து மாலை 4.30 மணிக்கு டெல்லி லோக் கல்யாண் மார்க்கில் நடைபெறும் நிகழ்ச்சியில் தேசிய விருது பெற்ற ஆசிரியர்களுடன் பிரதமர் மோடி கலந்துரையாட உள்ளார்.

    மத்திய அரசின் தேசிய நல்லாசிரியர் விருதுக்கு தமிழகத்தில் இருந்து 6 ஆசிரியர்கள் பரிந்துரைக்கப்பட்ட நிலையில், கோவையை சேர்ந்த ஸதி தேர்வாகியுள்ளார். #NationalTeachersAward
    கோவை:

    மத்திய அரசின் தேசிய நல்லாசிரியர் விருதுக்கு கோவையை சேர்ந்த தலைமை ஆசிரியை ஸதி தேர்வு செய்யப்பட்டு உள்ளார். தமிழகத்தில் இருந்து இவர் மட்டுமே தேர்வு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. ஆசிரியர் தினத்தையொட்டி மத்திய அரசு சார்பில் சிறந்த ஆசிரியர்களுக்கு தேசிய நல்லாசிரியர் விருது வழங்கி கவுரவிக்கப்படுகிறது.

    அதன்படி இந்த விருதுக்கு கோவை மாவட்டம் மதுக்கரை ஒன்றியம் மலுமிச்சம்பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்க பள்ளி தலைமை ஆசிரியை ஆர்.ஸதி தேர்வு செய்யப்பட்டு உள்ளார். தேசிய நல்லாசிரியர் விருதுக்கு தமிழகத்தில் இருந்து ஆர்.ஸதி மட்டுமே தேர்வு செய்யப்பட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது.

    இது குறித்து தலைமை ஆசிரியை ஆர்.ஸதி கூறியதாவது:-

    நான் மலுமிச்சம்பட்டி பள்ளிக்கு தலைமை ஆசிரியையாக வந்தபோது 146 மாணவ-மாணவிகள் படித்து வந்தனர். மாணவர்களின் சேர்க்கையை அதிகரித்ததால் தற்போது 270 மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர். இதில் மாற்றுத்திறனாளி மாணவ-மாணவிகள் 28 பேர் படித்து வருகின்றனர்.

    எங்கள் பகுதி பொதுமக்கள் திறந்த வெளியில் மலம் கழிப்பதை தடுப்பதற்காக பள்ளியில் சிறந்த 6 மாணவ- மாணவிகளை தேர்வு செய்து ‘குட்டி கமாண்டோ’ என்ற அமைப்பை உருவாக்கினேன். கடந்த கல்வி ஆண்டு முதல் டேப்லெட் (கையடக்க கணினி) மூலம் மாணவ-மாணவிகளுக்கு எளிதில் புரியும்படி பாடம் நடத்தப்பட்டு வருகிறது. தற்போது நான் தேசிய நல்லாசிரியர் விருதுக்கு தேர்வு செய்யப்பட்டு உள்ளேன். மாணவ-மாணவிகளின் கற்றல் திறனை மேம்படுத்தியதற்கு பரிசாக இந்த விருதுக்கு நான் தேர்வாகி உள்ளதாக கருதுகிறேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.
    ×